நம் காதல் வெயில் காலத்தில் பெருகிப்போன நதி – கவிதை தொகுப்பு

உன்னை நினைவூட்டும் மரங்கள்

இந்த பெருநகரத்தில்.. 

ஒரு மகிழ்ச்சியான மரமாக நீ இருக்கும்பொழுது, 

உன் வாசனையின் நிழலில் அமர்ந்திருப்பேன். 

உன்னிடம் சொல்லாத.. 

உனக்கு எழுதாத நாட்களில்.. 

உன்னை நினைவூட்டும் மகிழ்ச்சியான மரங்களுக்கு கீழ் நின்றுகொண்டிருப்பேன்!