சென்னை குயர் இலக்கிய விழா 2020 — வாசிப்புமேடை
வசை பல கேட்டு,
வலிகள் தாங்கி,
ஊனை சிறையென எண்ணி,
உயிர் கொன்று,உதிரம் சிந்திய நாட்கள்உதிரட்டும்.
சிறைகள் உடைத்து,
சிறகுகள் கொண்டு,
வண்ணங்களாய் வானவில்லில் வலம் வருவோம்.
ஏன் ஏற்க வேண்டும்எவனோ சொன்ன இருபாலினை.
பால் புரட்சி செய்வோம், புதுமையினராய்.