2008-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அரவாணிகள் நலவாரியம் என்ற பெயரில் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக செயலற்ற நிலையில் இருந்து தற்போது மறுசீரமைக்கப்பட்ட இந்த வாரியம் மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சகத்தின் தலைமையின் கீழ் இயங்கும்.
மறுசீரமைக்கப்பட்ட இந்த வாரியத்தில் 10 திருநங்கைகள், 2 திருநம்பிகள் மற்றும் ஒரு சிஸ்-பாலின பெண் உள்ளிட்ட 13 பேர் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
அக்டோபர் 18, 2021 அன்று தமிழ்நாடு முதல்வர் திருமிகு மு க ஸ்டாலின், திமுக மகளிர் அணிசெயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு கனிமொழி மற்றும் மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமிகு கீதா ஜீவன் ஆகியோரை திருநங்கைகள் நல வாரியக் குழு உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜும் உடனிருந்தார்.
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். pic.twitter.com/yfmwt5RD1x
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 18, 2021
கழக மகளிர் அணிசெயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புக்குரிய அக்கா @KanimozhiDMK அவர்களை இன்று திருநங்கைகள் நல வாரிய குழு உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியான தருணம்…..?❤️@Udhaystalin @geethajeevandmk @NarthakiNataraj @arivalayam @priyaBa36021807 pic.twitter.com/7PbuOQGjl9
— Dr.A.Riya (@riya_anbu) October 18, 2021